பெண் பார்க்க சென்ற பொழுது வெளிவந்த ஜிம் ஓனரின் மற்றொரு முகம்..!
பெண்ணை காதலித்து பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறிய மாற்றிய ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின் கல்லூரி படிப்பை முடித்து இருவரும் தனியாக நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் விக்னேஸ்வரி சொந்தமாக உடற்பயிற்சி கூட நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு வந்து பெண் கேட்ட பொழுது வரதட்சணையாக 80 பவுன் நகை மற்றும் இந்த நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும் என கேட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜாதகம் சரி இல்லை என்று கூறி தன்னை ஏமாற்றியதாகவும் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனிடையே விக்னேஷ்வருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரிய வந்ததால் காவல் நிலையத்தில் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனுடைய நீதிமன்ற உத்தரவின் பேரில் விக்னேஷ்வர் மீது எஸ்சி எஸ்டி பிரிவு மற்றும் கற்பழித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்க பதிவு செய்து தலைமறைவாக இருந்த விக்னேஷ் வரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





