மீண்டும் சவரனுக்கு ரூ.57,000 கீழ் குறைந்த தங்கம் விலை..!
நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து, ரூ.7,080-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.720 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கும் மேலாக உயர்ந்துவந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்துவருவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




