ரூ.3 கோடி மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க கோரி வழக்கு..!
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய விசாரணையின் பொழுது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநரிடம் இசைவாணி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் 4 வாரங்களுக்குள் வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





