கார் டயர் வெடித்து விபத்து..9 மாத குழந்தை உயிரிழப்பு..!
சேலத்தில் கார் டயர் வெடித்து தரை பாலத்தில் தடுப்பில் கார் மோதியதில் ஒன்பது மாத குழந்தை உயிரிழந்தது. தீபக் அழகப்பன் – தெய்வானை தம்பதி சென்னையில் ஐடிவேலைக்கு சென்று வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட இரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட தம்பதி வாழப்பாடி அருகே சென்ற பொழுது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் முத்தம்பட்டி பகுதியில் தரைப்பாலம் பக்கவாட்டு சுவரின் பலமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் தம்பதியின் 9 மாத ஆண் குழந்தை உடல் முழுவதும் படுகாயம் அடைந்த தம்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





