பள்ளியில் வாயு கசிவு..ஆய்வில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்..!
திருவெற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக 39 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் ஆய்வு கூடத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது.
இதில் மயக்கம், மூச்சுதிணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு மாணவிகள் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கேசவமூர்த்தி தலைமை ஆய்வு அதிகாரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





