ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!
பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடன கலைஞர் ஜானி மாஸ்டருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய ஹைதராபாத் நீதிமன்றம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பைக்கு சென்ற பொழுது பாலியல் தொல்லை தந்ததாக செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





