--- --:--:-- --

ஒற்றை பனைமரம் திரைப்படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

4

ஒற்றை பனைமரம் திரைப்படத்தை தமிழ்நாட்டில் தலையிட அனுமதிக்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

ஈழ போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ஒற்றைப்பனைமரம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சீமான் இன்னுயிரை இழந்த மாவீரரின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் பொய் பரப்புரையை அனுமதிக்க கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல என்றும் உலகத்தமிழர் உணர்வோடு உயிரோடும் இரண்டரக் கலந்த விடுதலைப் போராட்டம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை பனைமரம் திரைப்படத்தை 25ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon