--- --:--:-- --

தீபாவளி பண்டிகை..கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி கடையில் திருட்டு..!

3

ஈரோட்டில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலையை பயன்படுத்தி ஜவுளி கடையில் திருடிய மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். தீபாவளி ஒட்டி ஜவுளி கடைகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் கடைக்கு வந்த மூன்று பெண்கள் துணிகளை பார்ப்பது போல் அங்கிருந்து ஆடைகளை திருடி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது ஆடைகளை திருடி சென்றது தெரியவந்தது.

 

அதையடுத்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மூன்று பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon