நான்காவது திருமணம் செய்து வீடியோ வெளியிட்ட நடிகர் பாலா..!
மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் பாலா நான்காவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அன்பு, வீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது முறை பொன்னான கோகிலா நான்காவதாக மணம் முடித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்று அவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். திருமணத்திற்கு பின் கேக் கட்டிங் செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளவர் தமது கடினமான காலங்களில் கோகிலா துணை நின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா கடந்த 2010 ஆம் ஆண்டில் அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பின்னர் 2021 ஆம் ஆண்டு அடுத்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். 2010 ஆம் ஆண்டு அமிர்தாவை திருமணம் செய்வதற்கு முன்பே பாலாவுக்கு கர்நாடகாவை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆனதாக சான்றுகள் வெளியாகி இருந்தன. முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





