--- --:--:-- --

ட்அவுட்டால் களைகட்ட போகும் விஜயின் தவெக மாநாடு!

1

தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் கட்சித் தலைவர் விஜயின் கட் அவுட் உடன் இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களின் கட்-அவுட்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

 

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கியது முதல் அவருடைய கொள்கைகள், கோட்பாடுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடையே எழுந்தது. ஆனால் அதற்கு முன்பாக, கடந்த ஆண்டு விஜய் சார்பில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழாவில் அவரது பேச்சு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

 

அப்போது, பேசிய நடிகர் விஜய், பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரைப் படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறியதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அமைந்தது.மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செய்தனர்.

 

அப்போது, தவெக மாநாடு நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்குத்தான் முதல் மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள், நினைவுநாளில் மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

 

இந்தச் சூழலில் அவரது கட்சிக் கொடி மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்வில் மேலும் சில முடிச்சுகள் அவிழ்ந்தன. கொடிப் பாடலில் பேரரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் உருவங்களுக்கு மத்தியில் விஜயின் உருவத்தை இடம்பெறச் செய்து தன் மற்றொரு பரிமாணத்தையும் காட்டியது தமிழக வெற்றிக் கழகம்.அதுமட்டுமின்றி அன்று விஜயும் தொண்டர்களும் எடுத்த உறுதிமொழியில், சாதி, மத பேதங்கள் வாயிலாக நடக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும், சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததும் அவரது கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தன.

 

 

கடந்த செப்டம்பர் 17-க்கு முன்பு வரை தனது தவெக தவிர்த்து வேறு எந்த ஒரு நிகழ்வுக்கும் போயிராத விஜய், பெரியாரின் 146வது பிறந்த நாளை ஒட்டி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வியப்பூட்டினார். அதுவே அவரது முதல் அரசியல் விஜயமாக அமைந்தது. முன்னதாக, அங்கு செல்வதற்கு முன், பெரியார் காட்டிய சமுத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

 

பெரியார், காமராசர், அம்பேத்கரைத் தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு தவெக மாநாட்டு திடலில் கட் அவுட் வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆளுநர் கலந்துகொண்ட இந்தி தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த பேச்சுக்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்த்தாய்க்கு தவெக மாநாட்டு திடலில் கட் அவுட் வைக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon