--- --:--:-- --

தனது மூச்சு காற்றை செலுத்தி பாம்புக்கு உயிர் கொடுத்த இளைஞர்..!

4

குஜராத்தில் அசைவின்றி கிடந்த பாம்புக்கு மூச்சுக்காற்றை செலுத்தி இளைஞர் உயிர் பிழைக்க வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வதோதரா மாவட்டத்தை சேர்ந்த வனவிலங்கு ஆர்வலரான இவருக்கு ஒரு அடி நீளம் உள்ள விஷம் இல்லாத பாம்பு அசைவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

சம்பவ இடத்திற்கு சென்றவர் அசைவின்றி கிடந்த பாம்பின் வாய் பகுதியில் தனது வாயை வைத்து மூச்சுக்காற்றை செலுத்தினார். முதல் இரண்டு முறையும் எந்த அசைவும் இல்லாமல் இருந்த பாம்பு மூன்றாவது முறை மூச்சுக்காற்றை செலுத்திய பொழுது நெளிய தொடங்கியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon