200 பேரின் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த சாம்சங் நிறுவனம்..!
samsung நிறுவனத்தின் இந்திய பிரிவில் முக்கிய பதவிகளில் உள்ள 200 பேரை பனி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போட்டி நிறுவனங்களின் விலை மலிவான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வரவால் சாம்சங் பிராண்டின் செல்போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் விற்பனை சரிந்து லாபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே செலவுகளை குறைக்க ஊழியர்கள் 200 பேரை பணிநீக்கம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே சென்னை ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





