--- --:--:-- --

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு..இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்..!

6

கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் கடைகள் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கி கொண்டனர்.

 

மோதலில் ஈடுபட்டவர்கள் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மோதலை கட்டுப்படுத்தி இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

இந்த மோதல் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டிய மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon