பொள்ளாச்சி அடுத்த கொள்ளக்கட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கன்வாடியில் வழங்கப்பட்ட உணவை பாதி உட்கொண்ட நிலையில் குழந்தைகள் வாந்தி எடுத்ததையடுத்து உணவு சமைத்த பாத்திரத்தை பார்த்தபொழுது அதில் பல்லி இறந்து கிடந்ததை அங்கன்வாடி பணியாளர் சிவகாமி மற்றும் செல்வநாயகி பார்த்துள்ளனர்.