--- --:--:-- --

வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!

5

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை தொடர்ந்து தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

 

காலையிலேயே திறந்து வியாபாரம் செய்யக்கூடிய டீக்கடைகள் பல சரக்கு மளிகை சாமான் கடைகள் ஆகியவை திறக்கப்படவில்லை. காலை 8 மணி முதல் 9 மணிக்கு திறக்கக்கூடிய மாற்றக்கடைகளும் இன்று திறக்கப்பட மாட்டாது எனவும் அவரது உடல் நலடக்கம் செய்யப்பட்ட பின்பு கடைகள் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வணிகர் சங்க தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த கடை அடைப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon