வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என நினைத்து பயந்துவிட்டேன்.. பயிற்சியாளர் சொன்ன தகவல்..!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் எடை குறைப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதியில் வெற்றி பெற்ற பின்பு 2.7 கிலோ எடை அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தும் 1.5 கிலோ எடை அதிகமாக இருந்ததாகவும் 50 நிமிடங்களுக்கு பிறகு வினேஷ் போகத் மீது வியர்வை துளி கூட தோன்றவில்லை எனவும் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு, மூன்று நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு வினேஷ் போகத் தொடர்ந்து கடினமாக உடற்பயிற்சி செய்வதை பார்த்த பின்பு நான் அவர் இறந்து விடுவாரோ என நினைத்து பயந்து விட்டேன் என சமூக வலைதளத்தில் பயிற்சியாளர் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





