ஸ்மார்ட் கார்டில் எளிதில் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்..!
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. முகவரி தொடர்பான முக்கிய அறிவிப்பு தான் அது. விலாசம் மாற்றுவதற்கான மிக சுலபமான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் ஆன்லைன் வழியாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்து கொள்ள முடியும்.
முக்கியமாக உங்கள் முகவரி மாற்றுவதை ஆன்லைனில் செய்ய முடியும் பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக உங்கள் விலாசத்தை மாற்றிக் கொள்ளலாம். ஸ்கிரீனில் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
அங்கு ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் என் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் முகவரிகளை மாற்ற அதிக நேரம் எடுக்காது. வழக்கமாக முகவரியை புதுப்பிக்க 15 நாள் முதல் 30 நாட்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





