உத்தரகாண்டில் பாலியல் வன்கொடுமை.. 9 நாட்களாக அழுகி கிடந்த சடலம்..!
உத்தரகாண்டில் பெண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள விலாஸ்பூர் பகுதியில் மாணவி வீட்டில் தனது 11 வயத மகளுடன் வசித்து வந்த செவிலியர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது மாயமானார்.
இது குறித்து அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டில் ஒன்பது நாட்களுக்கு பின்பு செவிலியர் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக தினம் கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செவிலியரிடம் இருந்து செல்போன் மற்றும் 3000 ரூபாயை திருடியதும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





