--- --:--:-- --

தியேட்டரின் கழிவறையில் வீடியோ எடுத்த மர்ம நபர்..பெண் அளித்த புகார்..!

8

பெங்களூருவில் தியேட்டரில் பெண் ஒருவர் கழிவறைக்கு சென்ற பொழுது மர்ம நபர் வீடியோ எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கடந்த வாரம் பிரபல காபி ஷாப்பில் பெண்கள் கழிவறைக்குள் செல்போன் வைத்து வீடியோ எடுத்ததாக அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் பெங்களூருவில் உள்ள ஊர்வசி திரையரங்கில் படம் பார்க்க சென்ற இளம்பெண் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்ற பொழுது அங்கு ஜன்னல் வழியாக ஒரு வீடியோ பதிவு செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இது குறித்து அந்த இளம் பெண் காமாட்சி பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சார்பில் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon