--- --:--:-- --

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தருக : சீமான்

3

ரத்தநாடு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடன் தண்டனை பெற்று தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

இளம்பெண் கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டினார்.

 

அனைத்து சமூக குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் அது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்காமல் குற்றங்களை ஒழிக்கவே முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கான அதிகாரத்தை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மூன்று ஆண்டுகளாக உறுதிமொழி மட்டும் எடுத்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

 

காவல்துறை ஆளுங்கட்சிக்கான ஏழைத் துறையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சீமான் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு கடன் தண்டனை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon