விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழத்தை ரூ.2.85 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பெண்..!
இலங்கை கோவில் திருவிழாவில் மாம்பழம் ஒன்று இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள குளத்தில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் வருடாந்திர மகா உத்ஷவம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கோவிலின் வளர்ச்சிக்காக விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஏலம் விடப்பட்டது பலத்த போட்டிக்கு மத்தியில் சிந்துஜா என்பவர் இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





