மரத்தில் தொங்கியபடி இருந்த ராஜநாகம்..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த வனத்துறையினர் சாதுரியமாக பிடித்தனர். குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஜாதிக்காய் பட்டை கிராம தோட்டத்தில் மரத்தில் தொங்கியபடி ராஜநாகம் இருந்தது.
இதனை கண்ட தோட்டத்தின் கண்காணிப்பாளர் பரத் என்பவர் குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த ஊழியர்கள் ராஜநாகத்தை பத்திரமாக பிடித்து சாக்கில் கட்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





