நேற்று இரவு பெய்த கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லூர் பேட்டை அருகே திருவரங்கம் பகுதியில் வீட்டின் பால்கனியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரிமுத்து என்ற விவசாயி உயிரிழந்தார்.
கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டிவேந்தர் முருகன் கோயிலில் சாலைகளில் தேங்கிய மாலை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கால்வாய் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.