--- --:--:-- --

திருவாடானை அருகே தனது மனைவிக்கு ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி அசத்திய கணவர்..!

7

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் கோட்டைமுத்து என்பவர் தனது மனைவி விஜயாவிற்கு வெண்கல சிலை அமைத்து மணிமண்டபம் பல கோடி செலவ செய்து அசத்தியுள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கட்டுகுடி கிராமத்தில் பிறந்தவர் கோட்டைமுத்து இவர் சென்னையில் அரசு பணியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். சென்னையில் விஜயா என்பவரை திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 15.05.2020 ஆம் தேதி விஜயா உடல்நலம் சரி இல்லாமல் இறந்து போனார்.

அவரது அஸ்தியை ஆதியூர் கிராமத்தில் தனது சொந்த இடத்தில் வைத்து தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் சுமார் 1 1/4 கோடி அளவில் மணி மண்டபம் கட்டி உள்ளார். அதில் 7.5 லட்சம் செலவில் வெண்கல சிலை அமைத்து அன்பை வெளிபடுத்தியுள்ளார்.

 

அந்த மணி மண்டபத்தில் உள்ளே  அவரும் அவரது மனைவியும் கலந்து கொண்ட விசேஷங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்நிழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அன்னதானமும் கரிவிருந்தும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு வந்திருந்த மக்களுக்கு அனைவருக்கும் சில்வர் தாம்பூழதட்டு, வேஷ்டி, சேலை, உள்ளிட்ட பொருட்களை பரிசாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இந்த பகுதியில் இது போன்று மனைவிக்கு மணி மண்டபம் கட்டுவது இது முதல் முறையாகும் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon