--- --:--:-- --

ரூ.10 ஆயிரம் கோடி மோசடி ..! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைவி3 ஆப் நீக்கம் ..!!

6

மைவி 3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் தமிழகம், ஆந் திரா, கேரளா உடபட பல்வேறு மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்நி றுவனத்தில் ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது. பொருள்களை வாங்குவது, ரேட்டிங் தருவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம்வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

யூடியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த நிறுவனத்திற்கு ஏராளமானோர் விளம்பரம் செய்து வருகின்றனர். சில ஆண்டாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய் தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பலலட்சம் பேர் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அவர்களின் விளம்பரம் தேடல், ரேட்டிங்கிற்கு -ஏற்ப பணம் வழங்கப்பட்டு வந்தது.

 

சிலருக்கு மாதம், பல ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் மோசடியான முறையில் பொதுமக்களிடம்ருந்து பணத்தை வசூலித்து வருவதாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விளம்பரத்தில் பல்வேறு நிலைகளில், பல்வேறு தொகைகளை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் சேர்ந்த நபர்கள் அவர்களுக்குகீழ் புது நபர்களை அறிமுகப்படுத்தும் போது, அறிமுகப்படுத்தும் நபருக்கு ஏற்கனவே இருக்கும் மெம்பரில் இருந்து உயர்வு வழங்கி கூடுதல் தொகை வழங்கப்படும். தினமும் விளம்பரம் பார்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம் என்று பொது மக்களுக்கு பேராசையை துாண்டும் வண்ணம் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

 

நம்ப முடியாத வகையில் எம்.எல்.எம் என்ற மல்டி லெவல் மார்க்கெட் டிங்யுக்தியில் இந்த திட்டம் இருப்பதாக போலீசார் புகார் பதிவு செய்திருந்தனர். இந்த நிறுவனத்தின் நிர்வாகியான பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் (36) என்பவர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

போலியான டாக்டர் பட்டம் பெற்று மோசடி செய்ததாக இந்த நிறுவனத்தை துவக்கிய நிறுவனர் விஜயராகவன் (45) என்பவர் மீது வழக்கு பதிவானது. பல மாநிலங்களில் நெட்வொர்க் அமைத்து ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது .

 

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் துரித விசாரணைக்காக சென்னையில் பொருளாதார குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டது. சென்னையில் மைவி 3 நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்ட நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

 

நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் செயலி முடக்கப்பட்டதால் அதில் முதலீடு செய்த பல லட் சம் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

முதலீடு செய்தவர்களின் நிலவரம் குறித்த உரிய விவரங்கள் தெரிய வில்லை. செயலி மூலமாக பணம் டெபாசிட் தவணை தொகை பெறுவது நடந்து வந்தது. செயலி முடங்கியதால் மொத்த செயல்பாடும் முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

 

செயலி தற்காலிகமாக முடங்கியதா?. சென்னை பொருளாதார குற்ற பிரிவு போலீசாரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என குழப்பம் நீடிக்கிறது. செயலி முடங்கியதால், முதிர்வு தொகை தாகை, தவணை தொகை பெற இயலாது. பலாது புதிதாக இந்த செயலியில் முதலீட்டாளர்களாக சேர முடியாது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon