திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம் இன்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.
இக்கோயிலின் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 6ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இன்று திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருகல்யாண வைபவம் அதிவிமர்ச்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது சிநேகவல்லி தாயார் சிவனை மணக்கும் நிகழ்வு
திருக்கல்யாணமாக நடைப்பெற்றது. திருகல்யாண வைபவத்திற்கு முன்பாக அம்மன் ஆராட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது ஒன்பது கன்னி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்வினை தொடர்ந்து மாங்கள்யத்தை வைத்து யாகசாலை பூஜை நடைபெற்று பின்னர் திருக்கல்யாண வைபவம் அதிவிமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் சுவாமிக்கு தீபஆராதனையும் காட்டப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகமும் விழா கமிட்டியும் செய்திருந்னர். திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் ஆய்வாளர் ஜெயபாண்டியன் முன்னிலையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.