வகுப்பறை கட்டிட மேல் பூச்சி விழுந்து மாணவர்கள் காயம்..!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது.

 

மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில் காயமடைந்தவர்களை ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.