பழனி கோயிலுக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் காலில் விழுந்து பெண் வியாபாரி ஒருவர் கோரிக்கை முன்வைத்தார். பழனி அடிவாரத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.
அப்பொழுது அவரை சந்தித்த சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு உதவும்படி கோரிக்கை விடுத்த பெண் எச். ராஜாவின் காலில் விழுந்து கெஞ்சி கோரிக்கை விடுத்தார். அவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தியவர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறிவிட்டு சென்றார்.