--- --:--:-- --

பக்தியால் திருப்பதிக்கு தனியாக சென்ற சிறுவன்..!

3

12 வயது சிறுவன் ஹைதராபாத்திலிருந்து தனியாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மதுசூதன் கவிதா தம்பதியின் 12 வயது மகன் பெற்றோரிடம் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனியாக திருப்பதி சென்றுள்ளான்.

 

மகனை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளித்துவிட்டு எல்லா இடங்களிலும் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் காணாமல் போன சிறுவன் ஏழுமலையானை கும்பிட்டு விட்டு வெளியீடு வருவதை கவனித்த போலீசார் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

அப்பொழுது இதுவரை 15 முறை பெற்றோருடன் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து தனக்கு மீண்டும் மீண்டும் ஏழுமலையானை கும்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

 

இதனால் தான் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்துடன் திருமலை வந்ததாகவும் அவன் கூறியுள்ளான். தகவல் அறிந்து திருப்பதி வந்த சிறுவனை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon