--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் திடீர் என்று என்ட்ரி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

4

கசிய ஆய்வின்பொழுது மருத்துவமனையில் திருப்தி இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை பணியிட மாற்றம் செய்யும் சூழல் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரம்பி சுகாதார நிலையத்திலிருந்து திறந்து வைத்தார்.

 

முன்னதாக பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பொழுது சிடி ஸ்கேன் மிஷினை முறையாக சுத்தம் செய்யாதது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

 

மருத்துவமனையில் ரகசிய ஆய்வின்பொழுது மருத்துவர் பணியிட மாற்றம் செய்வது வருத்தமான விஷயம் தான் எனவும் திருப்தி இல்லாத நிலை ஏற்படும் பொழுது பணியிட மாற்றம் செய்யும் சூழல் ஏற்படுகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon