--- --:--:-- --

நண்பனோடு பேச நின்றவர் கார் ஏற்றி கொல்ல முயற்சி..!

2

சாத்தான்குளம் அருகே சலூன் கடைக்காரர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முதல்வர் பகுதியை சலூன் கடை வைத்துள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியனுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்த நிலையில் சுப்ரமணியன் இசக்கி அம்மன் கோயில் முன்பு நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது காரில் வந்த லிங்கக்குமார் சுப்ரமணியன் மீது காரை மோதியுள்ளார்.

 

இதில் இரு சக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட சுப்ரமணியன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon