கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்று மகளை கட்டி தூக்கி கொடூரம்..!
ஓசூர் அருகே விவசாயி அடித்துக் கொன்றுவிட்டு அவரது மகளை கடத்தி சென்ற இளைஞரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். வெங்கட்ராஜ் என்ற இளைஞர் அரங்கேற்றிய இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு விவசாயி முனிராஜின் மகளை கடத்தி பலாத்காரம் செய்ததாக வெங்கட்ராஜ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் முனிராஜின் மகளை சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அது குறித்து முனிராஜ் கண்டித்த நிலையில் ஆத்திரமடைந்த வெங்கட்ராஜ் அவரை கட்டையால் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் முனிராஜ் உயிரிழந்தார். முனிராஜின் மகளையும் வெங்கட் கடத்தி சென்றதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் இருந்த முனிராஜின் மகளையும் மீட்டனர். தொடர்ந்து கேளமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





