அரியலூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். கீழ பலம்பூர் அருகே வசித்து வரும் 80 வயது முதியவர் ஆன சின்ன பிள்ளை என்பவர் எட்டு வயது சிறுமியை வழிமறித்து பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவரான மருதமுத்துவிடம் சிறுமியின் தாய் புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியின் தாயை மிரட்டி முதியவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மருதமுத்து வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இது குறித்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரை உறுதி செய்த போலீசார் முதியவர் சின்னபிள்ளையை கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பணம் வாங்கிக்கொண்டு விவகாரத்தை மூடி மறைத்த சிறுமியின் தாயையும் பணம் பெற்றுக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரையும் தேடி வருகின்றனர்.