மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்..600 பள்ளிகள் இழுத்து மூடல்..!

மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமானதால் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் எழுதப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மாநில கல்வித்துறை அமைச்சர் மாநிலம் முழுவதும் செயல்படாத அல்லது பூஜ்ஜியம் மாணவர் சேர்க்கை கொண்ட சுமார் 600 பள்ளிகளை அரசு மூடியுள்ளதாக தெரிவித்தார்.

 

மாணவர் சேர்க்கை அடியோடு குறைந்து முற்றிலும் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டதாகவும் மிக குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள் வேறுபள்ளியுடன் இணைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதை போன்று மேலும் சில பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.