இன்ஸ்டாகிராம் காதலியை கரம்பிடித்த மறுநாளே இளைஞர் பார்த்த வேலை..!
இன்ஸ்டாகிராம் காதலியை கரம்பிடித்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணையும் மணந்து கொண்ட இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிறை சென்றுள்ளார்.
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவருக்கும் திருநின்றவூர் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் வாயிலாக காதல் மலர்ந்துள்ளது. தொடர்ந்து இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் உடனான தொடர்பை துண்டித்ததால் அந்த பெண். அவனை தேடி கேளம்பாக்கத்திற்கு சென்றுள்ளார். பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் பதிவு திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வருவது தெரிய வந்தது.
இது குறித்து அந்த பெண் பிரின்சிடம் கேட்ட பொழுது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





