--- --:--:-- --

எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலச்சரிவு..பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது..!

8

எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது. தெற்கு எத்தியோப்பியாவின் பெர்ஃபா மண்டலத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் செங்குத்தான கிங்சோ கச்சா பகுதியில் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது.

 

தெற்கு எத்தியோப்பியாவின் சோபா மண்டலத்தின் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் செங்குத்தான கச்சா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு பணி நடைபெற்ற போது ஏராளமான பொதுமக்களும் கூடி நின்றனர்.

 

அப்பொழுது அதே இடத்தில் மீண்டும் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் மண்ணில் புதைந்தனர் இதனால் கூடுதல் படையினர் மீட்பு படையில் ஈடுபட்ட நிலையில் தோண்டும் இடங்களில் எல்லாம் உடல்கள் மீட்கப்படுவதால் மக்கள் பெரும் சோகத்தின் மூழ்கியுள்ளனர்.

 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon