திருவாடானையில் ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!
திருவாடானையில் ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தென்கிழக்கு தெரு பகுதியில் இன்று ஐந்திணை மக்கள் கட்சியை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரியும், சாதி ஆவண படுகொலையை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் ஏற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐந்திணை மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தைனேஸ்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிககள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, ஆதி தமிழர் கட்சி, பெரியார் பேரவை, தமிழக மக்கள் முன்னனி , தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்த் தேச மக்கள் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





