ஜூலை 23ல் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை..!
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர்ஸ் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து தாய் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது. பிற வழக்குகள் இருப்பதால் ஜாமின் கிடைக்க உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆட்கொடர்வு மனுவை விரைவாக விசாரிக்க கோரி அவரது வழக்கறிஞர் முடிவு செய்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் நகல்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து உத்தரவு நகல்களை தாக்கல் செய்வதாக உறுதி அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுவை 23 ஆம் தேதி எடுத்துக்கொள்ள கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அன்றைய தினமே விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





