லஞ்சம் வாங்கிய கூடலூர் வருவாய் வட்டாட்சியர்..!
லஞ்சம் வாங்கிய கூடலூர் வருவாய் வட்டாட்சிய ராஜேஸ்வரி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார். நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் சேர்த்தல் நீக்குதல் கட்டிட விரிவாக்க பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள லஞ்சம் பெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்தன.
அது சம்பந்தமான லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலம் வரையறை செய்வதற்கு 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடலூர் வருவாய் வட்டாச்சியர் ராஜேஸ்வரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





