--- --:--:-- --

குப்பைக்கு தீ வைத்து அருகில் இருப்பவர்களுக்கு ஷாக் கொடுத்த ஊழியர்..!

3

திருப்பத்தூர் அருகே நகராட்சி ஊழியர்கள் தீ வைத்த பொழுது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கடை வீதியில் குப்பைகளை சுத்தம் செய்து நகராட்சி ஊழியர்கள் தீ வைத்துள்ளனர்.

 

அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில் இருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் மூன்று இரு சக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon