--- --:--:-- --

பக்தர்களை வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன்..!

4

பிரபல யுடியூபர், பைக் ரைடர், டிடிஎப் வாசன், அவருடைய ஒளிப்பதிவாளர் அஜீஸ் திருப்பதி மலையில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அடிப்பட்டு கிடந்த இடத்திற்கு சென்று அவர்களை ஏமாற்றும் வகையில் funny வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

அந்த பதிவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாமி தரிசனத்திற்காக அடிபட்டு கிடக்கும் பக்தர்கள் எப்போது நமக்கு ஏழுமலையானை வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில் பக்தர்கள் அடிபட்டு கிடக்கும் அறையின் கதவை திறந்து விடுவதற்காக தேவஸ்தான ஊழியர் போல் அஜிஸ் செல்கிறார்.

 

ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த கலைப்பில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எடுப்புகின்றனர். அப்பொழுது அவர்களை ஏமாற்றி அஜீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார்.

 

அருகில் இருக்கும் டிடிஎஃப் வாசனோ இதெல்லாம் நமக்கு வேணாண்டா இப்படி எல்லாம் பண்ணா நம்மளை தேச துரோகி என்று சொல்லிவிடுவார்கள் என தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டே அந்த வீடியோவை முடித்துள்ளார். வாசன் மற்றும் அவருடைய நண்பர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon