போக்சோவில் கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை விடுதலை செய்ய மாணவ, மாணவிகள் போராட்டம்..!
திருவள்ளூரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களை விடுவிக்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார் சென்றது.
இதையடுத்து பள்ளியின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினார். அப்பொழுது கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளது. இதையடுத்து இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் போக்சோவில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆசிரியர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிலர் ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக திருவள்ளூர் ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





