ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகளே இல்லை : திருமாவளவன்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் பேசினார். குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கொலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறிய திருமாவளவன் ஆகவே சரணடைந்தவர்களை கைது செய்தது போதும் என்று காவல்துறையினர் புலன் விசாரணை நிறுத்திக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





