இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன் ஏமாற்றத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி..!
பெரம்பலூரில் இறந்த தாய் உயிருடன் வருவார் என நம்பி உடலுக்கு வீட்டிலேயே பூஜை செய்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் சாலையில் காரைக்குடியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் வசித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீராமின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று பார்த்த பொழுது அழுகிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடந்த நிலையில் ஸ்ரீராம் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
மேலும் அந்த பெண் உடல் அருகே பூஜை பொருட்கள் இருந்தன. இறந்த தாய் உயிருடன் வருவார் என நம்பி அவரது உடலுக்கு ஸ்ரீராம் வீட்டிலேயே பூஜை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தாய் உயிருடன் வராத அதிர்ச்சியில் ஸ்ரீராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





