--- --:--:-- --

வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர்..!

6

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு குப்பைகளை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த இளைஞர் மீது காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

 

ரயில்வே காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் கழிவுகள் தேங்கியிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த கௌதம் என்பவர் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கவிதாவிடம் புகார் அளித்துள்ளார். எனினும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது.

 

தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் நிகழ்விடத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த கவுன்சிலர் கவிதா அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் தூய்மை பணிகளை செய்ய வேண்டாம் என பணியாளரிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon