--- --:--:-- --

டீக்கடையில் கேலி செய்த இளைஞர்..கொதிக்கும் பாலை மேலே ஊற்றிய இளம் பெண்..!

5

ன்னை கேலி செய்த நபரை டீக்கடை நடத்தி வந்த பெண் கொதிக்கும் பாலை மேலே ஊற்றி பழிவாங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பாட்டன் குப்பத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.

 

பிரபல நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வரும் நபர் ஒருவர் இளம் பெண் நடத்தி வரும் டீக்கடை ஒன்றில் தினமும் தேனீர் அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். சம்பவத்தன்று இரவு தேநீர் அருந்த கடைக்கு சென்ற பிரேம்குமார் அந்த பெண்ணை தேர்வு செய்ததாக தெரிகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கடையில் இருந்த கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியதாகவும் இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் அந்த பெண்ணை தாக்கி கையை உடைத்ததாகவும் கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon