--- --:--:-- --

ஏர் இந்தியா விமானத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பயணிகள்..!

7

டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் மயக்கம் அடைந்தனர். தலைநகர் டெல்லியை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.

 

இந்த நிலையில் விமான நிலையத்தில் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்த பயணிகள் ஏசி வேலை செய்யாததால் மயக்கமடைந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளுடன் தரையில் அமர வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பயணிகள் மீது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் விமான போக்குவரத்து துறையை டேக் செய்து விமர்சித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon