கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!.
கலைஞரின் கனவு இல்லத்தில் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த 2024 – 2025-ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வழிகாட்டுதலின் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகள் அனைத்தும் 360 சதுர அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். 300 சதுர அடியுடனும், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத பொருளில் பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும். ஒரு வீட்டிற்கான தொகை அனைத்தையும் சேர்த்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





