பெட்ரோல் போட திரும்ப முயன்ற லாரி.. அசுர வேகத்தில் மோதிய பைக்..!
விழுப்புரத்தில் பெட்ரோல் போட சாலையில் நின்றிருந்த லாரியின் பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார்.
சாலையில் எதிர்ப்புறம் உள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக லாரி நின்றிருந்த பொழுது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நடந்ததை உணர்ந்ததும் உயிரிழந்தது யார் என்று கூட பார்க்காமல் அங்கிருந்து புறப்பட்ட லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





