--- --:--:-- --

தற்கொலைக்கு முயன்ற பெண்.. கூண்டோடு சிக்கிய பிரபல youtube சேனல்..!

5

சென்னையில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் youtube சேனலின் பெண் விஜே உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் இளம் பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அரசு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஏழு மாதங்களுக்கு முன்பு பார் ஒன்று தனியார் யூடியூப் சேனலுக்கு அந்த பெண் பேட்டி அளித்ததாகவும் அதில் ஆபாச வார்த்தைகளை சேர்த்து அனுமதி இல்லாமல் சமூக வலைதளங்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

ஆபாசமாக இருப்பதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் பெற்றோர் உறவினருக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதனையடுத்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் வாக்குமூலம் அடிப்படையில் youtube சேனல் உரிமையாளர், பேட்டி எடுத்த ஸ்வேதா, ஒளிப்பதிவாளர் யோகராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon